எம்.எல்.ஏ. தகுதியை இழக்கிறாரா சதன் திருமலைக்குமார்?
காசோலை மோசடி வழக்கில் மதிமுக எம்.எல்.ஏ சதன் திருமலைக்குமாருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், அவர் எம்.எல்.ஏ தகுதியை இழக்கக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, இரண்டு ஆண்டுக்கும் மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட மக்கள் பிரதிநிதி பதவியிலும், தேர்தலில் போட்டியிடும் தகுதியிலும் தற்காலிக தடையை எதிர்கொள்வார் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதன் மேல் முறையீட்டு வழக்கில் ஒட்டுமொத்த தீர்ப்புக்கும் தடை கிடைத்தால், மட்டுமே அவர் பதவியில் நீடிக்க வாய்ப்பு உள்ளது.