திருச்சி சரக டிஐஜி வருண்குமார் குடும்பத்தினரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மே 8ஆம் தேதி நேரில் ஆஜராக திருச்சி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று(Apr 29) விசாரணைக்கு வந்த போது டிஐஜி வருண்குமார் நேரில் ஆஜரானார். சீமான் தரப்பு வாதங்கள் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மே 8ஆம் தேதி சீமான் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக எந்த சமரச பேச்சுவார்த்தைக்கும் வாய்ப்பு இல்லை என வருண் குமார் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்..