"வீடியோ அனுப்புங்க.. ரூ.10,000 தரேன்" பிரஸ்மீட்டில் அறிவித்த ஜெயக்குமார்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பங்கேற்ற பின், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை பொதுவெளியில் பெரிய திரை கட்டி காண்பிக்கப்பட்டது. ஆனால், அதனை ஒருவர் கூட பார்க்கவில்லை, யாராவது ஒருவர் பட்ஜெட்டை ரசித்து பார்த்தார்கள் என்ற வீடியோவை எனக்கு அனுப்பி வைத்தால் அவர்களுக்கு 10,000 ரூபாய் பரிசு தருவதாக கூறினார்.