முதல்வருக்கு பாராட்டு விழா - சாய்ராம் கல்விக்குழுமத் தலைவர் பங்கேற்பு

Update: 2025-05-04 03:24 GMT

துணைவேந்தரை நியமனம் செய்யும் அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்கி உச்சநீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது. இதனை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் பல்கலைக்கழக நிர்வாகிகள் சார்பில் முதலமைச்சருக்கு பாராட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், சாய்ராம் கல்வி குழுமங்களின் தலைவர் சாய் பிரகாஷ் லியோமுத்து பங்கேற்று முதல்வருக்கு பாராட்டுகளை தெரிவித்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்வியாளர்களுக்கு சாய் பிரகாஷ் லியோமுத்து பொன்னாடை போர்த்தி நினைவுப்பரிசுகளை வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்