சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் பூத் கமிட்டி பொறுப்பாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, அவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு கட்சியை பலப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாக கூறிய ஈபிஎஸ், பூத் கமிட்டி சிறப்பாக செயல்பட்டாலே எளிதாக வெற்றிபெற முடியும் என தெரிவித்தார். தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், திமுக கூட்டணியை எதிர்க்க வேண்டுமென்றால் வலுவான கூட்டணி தேவை என்றார்.