நெல்லை அதிமுக அமைப்பு செயலாளர் கருப்பசாமி பாண்டியன் மறைவையொட்டி, அவரது உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அஞ்சலி செலுத்திய பின், எடப்பாடி பழனிசாமியும், ஒ.பன்னீர்செல்வமும் தூத்துக்குடியில் இருந்து சென்னை வருவதற்கு ஒரே விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு இருந்தது. இதனையடுத்து, எடப்பாடி பழனிச்சாமியுடன் ஒரே விமானத்தில் பயணம் செய்வதை தவிர்த்த ஒ.பன்னீர்செல்வம் நெல்லையில் அஞ்சலி செலுத்தி விட்டு காரில் மதுரை வந்து விமானத்தில் சென்னை திரும்பினார்.