"பிச்சை கேட்கவில்லை, உரிமையை தான் கேட்கிறோம்" - உயர்கல்வித்துறை அமைச்சர் பரபரப்பு பேச்சு | DMK
நிதிக்காக மத்திய அரசிடம் மண்டியிட மாட்டோம் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர், தமிழகத்திற்கு மத்திய அரசு நிதி வழங்காத விவகாரத்தில் முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என தெரிவித்தார். மேலும், நிதிக்காக மண்டியிட மாட்டோம் என கூறிய அமைச்சர், மத்திய அரசிடம் நாங்கள் பிச்சை கேட்கவில்லை, உரிமையை தான் கேட்கிறோம் என தெரிவித்தார். அதனால் விரைந்து மத்திய அரசு நிதியை விடுவிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தினார்.