"மாணவர்களை நிறுத்த வேண்டாம்..?" மேயரிடம் வேண்டுகோள் விடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் | DMK
அரசு நிகழ்ச்சிகளில் வரவேற்புக்காக மாணவர்களை நிறுத்த வேண்டாம் என மேயர் பிரியாவிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தேசிய குடற்புழு நீக்க நாளையொட்டி சென்னை, வேளச்சேரியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்கத்திற்கான மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிகளில் அரசு சார்ந்த நிகழ்ச்சிகள் நடக்கும் போது வரவேற்பிற்காக மாணவர்களை நிறுத்த வேண்டாம் என சுற்றறிக்கை அனுப்பி கடுமையாக பின்பற்ற வேண்டும் என மேடையிலேயே மேயர் பிரியாவிடம் வேண்டுகோள் விடுத்தார்.