முதல்வர் ஸ்டாலின் அழைப்பு.. பாமக பங்கேற்குமா? அன்புமணி நச் பதில்

Update: 2025-02-27 03:10 GMT

மத்திய அரசு கொண்டு வரும் கல்வி கொள்கையை ஏற்கவோ, மறுக்கவோ மாநில அரசுக்கு உரிமை உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சேலத்தில் பேசிய அவர், தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பான அச்சத்தை போக்க மத்திய அரசு முயற்சிக்க வேண்டுமென குறிப்பிட்டார். மேலும், இது தொடர்பாக அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்று கருத்துகளை தெரிவிப்போம் என அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் மொழியை வைத்து அரசியல் செய்ய கூடாது என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்