கர்நாடக மாநிலம் தும்கூருவில் வீட்டின் முன் காவலுக்கு படுத்திருந்த நாயை சிறுத்தை கவ்வி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொரேமவினஹள்ளி கிராமத்தில் வசிக்கும் சங்கரலிங்கையாவின் வீட்டில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இதனால் அச்சமடைந்துள்ள மக்கள், உடனே சிறுத்தையை பிடிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.