ஏழை மக்களை பாதிக்கும் வகையில், விரைவு ரயில்களில் சாதாரணப் பெட்டிகளை குறைத்துவிட்டு, ஏசி பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சேரன் விரைவுரயில், சென்னை-திருவனந்தபுரம் , நீலகிரி, நெல்லை , பொதிகை விரைவு ரயில்களில் படுக்கை வசதி கொண்ட பெட்டிகளை குறைத்து, அதற்குப் பதிலாக ஏசி பெட்டிகளை சேர்ப்பது ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக ரயில்வே துறை முடிவு செய்துள்ளதை சுட்டிக்காட்டி, இது ஏழை மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என கண்டனம் தெரிவித்துள்ளார்.