Perfect ஸ்கெட்ச் - பிளானோடு தமிழகத்தில் இறங்கும் அமித்ஷா

Update: 2025-08-22 03:26 GMT

மண்டல பாஜக பூத் கமிட்டி மாநாடு - அமித்ஷா தமிழ்நாடு வருகை

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகையை ஒட்டி, திருநெல்வேலியில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. திருநெல்வேலி மண்டல பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடு உள்ளிட்டவைக்காக திருநெல்வேலிக்கு வருகை தரும் மத்திய அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வீட்டில் நடைபெறும் தேநீர் விருந்தில் பங்கேற்க உள்ளார். அதன்பின்பு திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், தென்காசி ஆகிய 5 நாடாளுமன்ற தொகுதிகளில் உள்ள 28 சட்டமன்ற தொகுதி பூத் பொறுப்பாளர்கள் உடன் அவர் கலந்து உரையாட உள்ளார். அமித்ஷாவின் வருகையை ஒட்டி, போலீசார் மாநகர் முழுவதும் குவிக்கப்பட்டு உள்ளனர். ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்