கும்பமேளாவிற்கு படையெடுக்கும் மக்கள் - திணறும் பிரயாக்ராஜ்.. குவிக்கப்பட்ட போலீசார்
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில், ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்களில் பக்தர்கள் படையெடுத்து வருவதால், போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. கும்பமேளாவில் புனித நீராட வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், பிரயாக்ராஜில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால், பிரயாக்ராஜ் - அயோத்தி சாலையின் இரு புறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நகர முடியாமல் பல கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கின்றன. போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீராக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.