நடுங்கவிட்ட டேராடூன் கொள்ளையர்கள்.. பட்டப்பகலில் Gun பாய்ண்டில்...

Update: 2025-03-14 05:55 GMT

உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனில் உள்ள வாணி விஹார் எனும் பகுதியில் மக்கள் சேவை மையத்தில் துப்பாக்கி முனையில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. வாடிக்கையாளர் போல முகமூடி அணிந்து நுழைந்த மூன்று நபர்கள் திடீரென தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை காட்டி மிரட்டி சுமார் மூன்று லட்சம் மதிப்பிலான பணத்தை கொள்ளை அடித்து விட்டு தப்பி ஓடியுள்ளனர். பட்டப் பகலில் துப்பாக்கி முனையில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது‌.

Tags:    

மேலும் செய்திகள்