Uttar Pradesh | பிரசாத லட்டு சாப்பிட்டதால் உயிரிழந்த பெண்.. 17 பேருக்கு தீவிர சிகிச்சை..!
உத்தரப்பிரதேசத்தில் கோயிலில் லட்டு பிரசாதம் சாப்பிட்ட பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹாத்ரஸ் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் அமைந்துள்ள கோயிலில் லட்சுமி பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். பூஜைக்குப்பின் லட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. இதை பலரும் உட்கொண்ட நிலையில், 18 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பெண் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.