Uttar Pradesh | பைக்கில் வந்த இளைஞர்கள் செய்த அசிங்கம்.. வீட்டு வாசலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
உத்தரப்பிரதேசத்தில், வீட்டு வாசலில் நின்ற பெண்ணின் கழுத்தில் இருந்து தங்கச் செயினை இருவர் பறித்துச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
காசியாபாத் பகுதியில், பபிதா குப்தா என்பவர்,
தனது வீட்டு வாசலில் நின்று தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தபடி வந்த இருவர், கண்ணிமைக்கும் நேரத்தில் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கச் செயினை பறித்துச் சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.