Uttar Pradesh | Accident | மதுபோதையில் பாய்ந்த கார்.. நடந்து சென்ற 5 பேர் கொடூர பலி!

Update: 2025-10-25 09:29 GMT

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில், அதிவேகமாக சென்ற கார், பாதசாரிகள் மீது மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர். நாக்லா புத்தி என்ற பகுதியில் விபத்து நிகழ்ந்துள்ளது. முதலில் இருசக்கர வாகனம் மீது மோதிய அந்தக் கார், பின்னர் அருகில் இருந்த தடுப்பு மற்றும் பாதசாரிகள் மீதும் மோதியது. இதில் 5 பேர் உயிரிழந்த நிலையில், இரண்டு பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காரை ஓட்டிய நபர் மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கியதாக கூறப்படும் நிலையில், அவரை போலீசார் கைது செய்தனர். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்