Puducherry | LJK | சுனாமி நினைவு தினம் - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அஞ்சலி
சுனாமி நினைவு தினத்தை ஒட்டி, புதுச்சேரி வீராம்பட்டினம் கடற்கரையில் உள்ள, சுனாமியால் உயிரிழந்தவர்களின் நினைவு சின்னத்தில் லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
கடந்த 2004ஆம் ஆண்டு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கடலோர கிராமங்களை சுனாமி பேரலை தாக்கியது. இதில், புதுச்சேரி மாநிலத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். சுனாமி பேரலை தாக்குதலின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டதை ஒட்டி, புதுச்சேரி வீராம்பட்டினம் கடற்கரையில், சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவு சின்னத்தில், லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில், கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மலர் வளையம் வைத்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். அதைத் தொடர்ந்து, ஊர் மக்களுடன் சேர்ந்து, கடலில் மலர் தூவி ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் அஞ்சலி செலுத்தினார்.
அப்போது, அங்கு கலைமாமணி சிற்பி குபேரன் உருவாக்கி இருந்த சுனாமி நினைவு மணல் சிற்பத்தை பார்வையிட்ட ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், சிற்பி குபேரனை வெகுவாக பாராட்டினார்.