திருப்பதி ஏழுமலையான் முன்னின்று வரவு செலவு கணக்கை படித்த ஏகாங்கி

Update: 2025-07-17 03:08 GMT

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆணிவார ஆஸ்தானத்தை முன்னிட்டு சம்பிரதாய ரீதியாக ஏழுமலையானின் புது வரவு செலவு கணக்கு தொடங்கப்பட்டது. கோவில் நடை திறந்தவுடன் ஏழுமலையானுக்கு சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை ஆகிய நித்திய சேவைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து கோவில் ஏகாங்கி ஏழுமலையான் முன்னின்று கடந்த ஆண்டு வரவு செலவு கணக்கை படித்தார். தொடர்ந்து தேவஸ்தானத்தில் உள்ள அனைத்து தலைமை அதிகாரிகளுக்கும் புது வரவு, செலவு புத்தகம் மஞ்சள் குங்குமம் வைத்து கொடுக்கப்பட்டது. தொடர்ந்து ஏகாங்கி அனைவரிடமும் காணிக்கை வசூல் செய்து அந்த காணிக்கை தொகையை புது வரவு செலவு புத்தகத்தில் வரவு வைத்தார். தொடர்ந்து திருப்பதி மலையில் உள்ள பெரிய ஜீயர் மடத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்