பேய் போல் சீறி ஓடும் வெள்ளம்.. இடிந்து தொங்கும் பாலம் - பயமுறுத்தும் காட்சி

Update: 2025-08-25 02:49 GMT

உடைந்து விழும் நிலையில் பாலம் - போக்குவரத்து நிறுத்தம்

ஜம்மு காஷ்மீரில் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாலம் உடைந்து சேதம் அடைந்துள்ளது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், தாழ்வான இடங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. கதுவா மாவட்டத்தில், ஜம்மு - பதான்கோட் தேசிய நெடுஞ்சாலையில், சாகர் காட் ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டிருந்தது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பாலத்தின் தூண்கள் சேதமடைந்து, எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்