மின்னல் வேகத்தில் வந்த Bus ஒரு நொடியில் Bikeஐ சாய்த்துவிட்டு நிற்காமல் ஓட்டம்
கேரளாவில் அரசு பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்தவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பத்தனம்திட்டா மாவட்டம் புறம்பாலை சந்திப்பில் அதிவேகமாக வந்த அரசு பேருந்து, இடதுபுறமாக வந்த இருசக்கர வாகனத்தை இடித்துவிட்டு நிற்காமல் சென்றுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் சைக்கிளில் சென்றவர் நிலை தடுமாறி கீழே விழுந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக எந்த காயமும் ஏற்படவில்லை.