Telangana | கொடுமைப்படுத்திய மகன்.. நிலத்தை தானம் செய்து பழிவாங்கிய தந்தை.. இத்தனை கோடியா?

Update: 2025-10-16 03:43 GMT

தெலங்கானா மாநிலத்தில் வயதான காலத்தில் தன்னை கவனிக்காத மகனை, தந்தை ஒருவர் நூதன முறையில் பழிவாங்கியுள்ளார்.

ஹனுமகொண்டா மாவட்டம் எல்கத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சியாம் சுந்தர் ரெட்டி. வயதான காலத்தில் இவரை இவரது மகன் ரஞ்சித் ரெட்டி சரிவர கவனிக்காமல் இருந்துள்ளார். சாப்பாடு கூட போடாமல் கொடுமையும் படுத்தியுள்ளார். இதனால் தொடர்ந்து விரக்தியில் இருந்த தந்தை சியாம் சுந்தர் ரெட்டி, தனது மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை, அரசுக்கு தானமாக வழங்கிவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்