தெலங்கானாவில் காங்கிரஸ் அமைச்சர் கொண்டா சுரேகாவின் தனிப்பட்ட அதிகாரியாக இருந்த சுமந்தை கைது செய்ய ஜூபிலி ஹில்ஸில் உள்ள அவரது வீட்டிற்கு போலீசார் சென்ற விவகாரம் அம்மாநில அரசியலில் பெரும் பூதாகரமாகியுள்ளது. துப்பாக்கி முனையில் பணம் கேட்டு பல நிறுவனங்களை சுமந்த் மிரட்டியதாக குற்றம் சாட்டப்படும் நிலையில், அவரை பணியிலிருந்து மாநில அரசு நீக்கியது. இந்த நிலையில், அவரை கைது செய்ய அமைச்சரின் வீட்டிற்கு போலீசார் சென்றபோது போலீசாரை அமைச்சர் சுரேகாவின் மகள் சுஷ்மிதா தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்ததோடு முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.