Protest |போலீஸ் மீது கல் வீச்சு..இறங்கி அடித்த போலீஸ்.. காங்கிரஸ் எம்.பி படுகாயம்-கேரளாவில் பரபரப்பு
போலீஸ் தடியடி - காங்கிரஸ் எம்.பி படுகாயம்
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் போலீசார் தடியடி நடத்தியதில் காங்கிரஸ் எம்.பி ஷாபி பறம்பில் உள்பட ஏராளமானோர் படுகாயமடைந்தனர். கலைக்கல்லூரியில் நடைபெற்ற மாணவர் பேரவை தேர்தல் வெற்றி பேரணியில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் போலீசார் தடியடி நடத்திய நிலையில் இதனை கண்டித்து நடைபெற்ற கூட்டத்தில் போலீசார் மீது கல் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.