பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவுக்கு 4 நாள் அரசுமுறைப் பயணமாக, டெல்லியிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்வதுடன், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். இதையடுத்து அமெரிக்கா செல்லும் பிரதமர், பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தனது பயணம் குறித்து தெரிவித்த பிரதமர், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அழைப்பின் பேரில், இரண்டு நாள் பயணமாக அமெரிக்கா செல்வதாகவும், தனது நண்பரான டொனால்ட் டிரம்பை சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்