வீட்டிலேயே கங்கையை உருவாக்கி நாட்டையே திரும்பி பார்க்க வைத்த பெண்

Update: 2025-02-18 04:30 GMT

மகாகும்பமேளாவிற்கு செல்ல இயலாததால் கர்நாடகாவை சேர்ந்த பெண் ஒரு தனித்துவமான செயலை மேற்கொண்டுள்ளார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 57 வயதான கௌரி, பிரயாக்ராஜ்ஜில் நடக்கும் மகா கும்பமேளாவிற்கு செல்ல போதிய பொருளாதார வசதி இல்லாததால் தனது வீட்டின் கொல்லைபுரத்தில் கிணறு ஒன்றை தோண்டியுள்ளார். டிசம்பர் மாதம் தொடங்கி தினமும் 6-8 மணி நேரம் உழைத்து, பிப்ரவரி 15 அன்று கிணற்றை தோண்டி முடித்துள்ள அவர், இந்த 40 அடி ஆழ கிணற்றில் தண்ணீர் கிடைத்ததால் மகிழ்ச்சியடைந்துள்ளார். மேலும் இந்த மாத இறுதியில் மகா சிவராத்திரி தினத்தன்று அதில் கெளரி நீராட திட்டமிட்டுள்ள நிலையில் அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்