Karnataka | அம்மாவை கட்டிப்போட்டு வாயை அடைத்து கழுத்தை நெறித்து கொன்ற மகன் - நடுங்கவைக்கும் காரணம்
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை அருகே மது அருந்த பணம் தராத தாயை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துலசிகேரி கிராமத்தை சேர்ந்தவர் இளைஞர் வெங்கடேஷ். இவர் மதுவிற்கு அடிமையானவர் என கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பவத்தன்று தனது தாய் ஷாவாக்காவிடம் மது அருந்த பணம் கேட்டுள்ளார். அவர் பணம் தர மறுக்கவே, இளைஞர் வெங்கடேஷ் அவரை கட்டிப்போட்டு, வாயை துணியை வைத்து அடைத்து, கழுத்தை நெறித்து கொலை செய்து, பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். காலையில் ஷாவாக்காவின் உயிரிழந்த உடல் மீட்கப்பட்ட நிலையில், வயல் பகுதியில் பதுங்கியிருந்த இளைஞர் வெங்டேசும் கைது செய்யப்பட்டார்.