குளிரின் பிடியில் ஸ்ரீநகர்... - ஊசியாய் குத்தும் பனி..

Update: 2025-02-02 14:36 GMT

ஜம்மு-காஷ்​மீர் ஸ்ரீநகரில் கடும் குளிர் நிலவுகிறது. குறைந்தபட்சமாக ஒரு டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புகழ்பெற்ற தால் ஏரி உள்ளிட்ட இடங்களில் பொதுமக்கள் நெருப்பு மூட்டி குளிர்காய்ந்தனர். இதனிடையே, தோடா மாவட்டம் பலேசாவில் மீண்டும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் மழை பெய்துள்ளதால், வறட்சி பாதிப்பில் இருந்து மீள முடியும் என விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்