Jammu Kashmir "ஜம்மு-காஷ்மீர் முழுவதும் இந்திய மகுடத்தின் கீழ் வரவேண்டும்" -பிரிட்டன் எம்.பி கருத்து

Update: 2026-01-05 13:56 GMT

ஜம்மு-காஷ்மீர் முழுவதும் இந்திய மகுடத்தின் கீழ் வரவேண்டும்" - பிரிட்டன் எம்.பி கருத்து

ஜம்மு-காஷ்மீரில் இருந்து காஷ்மீர் பண்டிதர்கள் கடந்த 1992ம் ஆண்டு வெளியேற்றப்பட்டபோதே, 370வது பிரிவை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தியதாக, பிரிட்டன் எம்.பி. பாப் பிளாக்மேன்

Bob Blackman தெரிவித்தார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளை பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்ததையும் தான் கண்டித்துள்ளதாக தெரிவித்தார். ஜம்மு காஷ்மீர் முழுவதும் இந்திய மகுடத்தின் கீழ் மீண்டும் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்றும் பிரிட்டன் எம்.பி.பாப் பிளாக்மேன் வலியுறுத்தினார்.

Tags:    

மேலும் செய்திகள்