Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (06.01.2026) | 1PM Headlines | ThanthiTV

Update: 2026-01-06 07:56 GMT
  • தமிழகம் முழுவதும், பல்வேறு மாவட்டங்களில் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்... அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடும் நிலையில், போலீசார் கைது செய்து வருகின்றனர்...
  • 9ஆம் தேதி வெளியாக உள்ள ஜனநாயகன் படத்திற்கு இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை என, தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு... மனுவாக தாக்கல் செய்தால், இன்று பிற்பகலில் அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது...
  • தமிழக அரசில் பல்வேறு துறைகளில் 4 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக ஈபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்... ஊழல் குறித்து விசாரிக்க கமிஷன் அமைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கோரிக்கை வைத்ததாகவும் தெரிவித்தார்..
  • வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது... அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் தென்மேற்கு வங்க கடலை நோக்கி நகரக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது...
  • திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், மலை அடிவாரத்தில் வசிக்கும் பொதுமக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்... பழனியாண்டவர் கோவில் தெருவை சேர்ந்த பெண்கள் சாக்லேட் கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்...
Tags:    

மேலும் செய்திகள்