பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முக்கிய முடிவு

Update: 2025-08-12 16:16 GMT

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் முக்கிய முடிவு

புதிதாக 4 செமி கண்டக்டர் ஆலைகளை அமைக்க மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 6 செமி கண்டக்டர் ஆலைகளை செயல்படுத்தும் பணி பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

அதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில், India Semi conductor Mission திட்டத்தின் கீழ் மேலும் 4 செமி கண்டக்டர் ஆலைகளை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பஞ்சாப், ஆந்திரா, ஒடிசா ஆகிய மூன்று மாநிலங்களில் சுமார் 4 ஆயிரத்து 600 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த செமி கண்டக்டர் ஆலைகள் அமைக்கப்பட உள்ளன.

இதன்மூலம் சுமார் 2 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், ஏராளமான மறைமுக வேலை வாய்ப்புகளும் கிடைக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்