Haryana | நாட்டையே உலுக்கிய டெல்லி கார் குண்டுவெடிப்பு; கைப்பற்றப்பட்ட 2600 கிலோ வெடிபொருள்

Update: 2025-11-22 08:21 GMT

டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சூழலில், காரில் வெடித்தது அமோனியம் நைட்ரேட் வெடி பொருள் என கண்டறியப்பட்டது. அந்த சம்பவத்திற்கு ஒருநாள் முன்பு, ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில் 2 ஆயிரத்து 600 கிலோ அமோனியம் நைட்ரேட் வெடி பொருட்களை, ஜம்மு காஷ்மீர் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வெடி பொருட்களை பயங்கரவாதிகள் காரில் நிரப்பி நாட்டின் பல்வேறு பகுதிக்கும் எடுத்துச் சென்று வெடிக்க வைப்பதற்காக சேமித்து வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், வெடி பொருள் பறிமுதல் செய்யப்பட்டதன் காட்சிகள் வெளியிடப்பட்டிருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்