செல்போன் பேசியபடி அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் சஸ்பெண்ட்
கேரளாவில் அரசு பேருந்து ஓட்டுநர் செல்போன் பேசிக்கொண்டே பேருந்து இயக்கும் காட்சி வெளியான நிலையில் ஓட்டுநர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோட்டிலிருந்து கோவை செல்லும் கேரளா அரசு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான பேருந்தில் ஓட்டுனர் தனது மொபைல் போனை பேசிக் கொண்டவரே பேருந்தை இயக்கியுள்ளார். இதனையடுத்து பயணி ஒருவர் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட நிலையில் ஓட்டு நர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.