Karnataka Gun Shot | பாஜக எம்எல்ஏ வீட்டின் முன்பு துப்பாக்கி சூடு | குவிக்கப்பட்ட போலீசார் | கர்நாடகாவில் பரபரப்பு
பாஜக எம்எல்ஏ வீட்டின் முன்பு துப்பாக்கி சூடு - ஒருவர் பலி
கர்நாடகா மாநிலம் பெல்லாரியை சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஜனார்த்தன ரெட்டி வீட்டின் முன் நடந்த துப்பாக்கிச் சூட்டில், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ..பாஜக எம்எல்ஏவின் வீட்டின் முன்பு வால்மீகி சிலை திறப்பு தொடர்பான பேனர் வைப்பதில், இரு கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது...இதனால் அப்பகுதியில் கலவர சூழல் நிலவுவதால், எம்எல்ஏ ஜனார்த்தன ரெட்டி வீட்டை சுற்றி போலீசார் 200 மீட்டர் சுற்றளவில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர்...