Diwali | Uttarpradesh | யோகி போட்ட உத்தரவு.. உபியே ஜொலி ஜொலிக்க செய்து காட்டிய மக்கள்
தீபாவளியை முன்னிட்டு உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் 11 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு, அப்பகுதியே பிரகாசமாய் காட்சியளித்தது.
உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், தீபாவளி பண்டிகைக்கு நகர் முழுவதும் பண்டிகை கோலத்துடன் காட்சியளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி நதிக்கரைகளில் தீபாராதனைகள், வான வேடிக்கைகள், ட்ரோன் ஷோக்கள், விளக்குகள் ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மொரதாபாத் மாவட்டத்தில் 11 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டு, நகரே ஜொலித்தது.