Chandrababu Naidu | ``ஜெயிச்சிடுங்க ரூ.100 கோடி தரேன்..’’ - ஆந்திர இளைஞர்களுக்கு ஜாக்பாட்
""குவாண்டம் அறிவியலில் நோபல் பரிசு வென்றால் ரூ.100 கோடி""
குவாண்டம் அறிவியல் துறையில் நோபல் பரிசு பெறும் ஆந்திராவைச் சேர்ந்தவருக்கு பரிசாக 100 கோடி ரூபாய் வழங்கப்படும் என ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். குவாண்டம் தொழில்நுட்பம் எதிர்கால அறிவியல் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்க உள்ள நிலையில், அந்தத் துறையில் ஆந்திர இளைஞர்கள் சாதிக்க வேண்டும் என்பதை ஊக்குவிக்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது"