Delhi Issue | கேட்ட அந்த சத்தம்.. கண நேரத்தில் பீதியடைந்த டெல்லி மக்கள்
டெல்லியில் பேருந்து டயர் வெடித்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர். டெல்லி தெளலாகான் பகுதிலிருந்து புறப்பட்ட அரசு பேருந்து ரேடிசன் ஹோட்டல் அருகே சென்றபோது திடீரென அதன் சக்கரம் பயங்கர சப்தத்துடன் வெடித்தது. இதனால் அந்தப் பகுதியில் பீதி ஏற்பட்டதால் போலீசார் குவிந்தனர். பேருந்து சக்கரம் வெடித்ததால்தான் சப்தம் ஏற்பட்டதாக தெரியவந்ததையடுத்து அங்கு இயல்பு நிலை திரும்பியது.