எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தும் வரை சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டது தொடரும் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில், ஹோண்டுரஸ் குடியரசின் தூதரகத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பயங்கரவாதத்தை தவிர வேறு எந்த பேச்சு வார்த்தையும் இல்லை என தெரிவித்தார். மேலும், பாகிஸ்தானின் எல்லை தாண்டிய பயங்கரவாதம் மொத்தமாக நிறுத்தப்படும் வரை, சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டது தொடரும் என்றும், இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.