உடைந்து உருண்ட மலை - வீட்டுக்குள்ளே தூங்கிய சிறுவன் உடல் நசுங்கி கோர பலி
உத்தரகாண்டில் வீட்டின் மீது பாறை விழுந்ததில், உறங்கி கொண்டிருந்த சிறுவன் பலியான சோகம் அரங்கேறியுள்ளது. மாநிலம் முழுவதும் கனமழை பெய்து வருவதால், உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் மாவட்டம் தேவத் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் மீது அருகே இருந்த மலையின் மிகப்பெரிய பாறை ஒன்று விழுந்தது. இதில் மேற்கூரை உடைந்து விழுந்ததில், 12 வயது சிறுவன் உடல் நசுங்கி பலியானார். தகவலறிந்து சம்பவ இடம் விரைந்த மீட்பு படையினர் விபத்தில் சிக்கிய மற்றவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.