Indian Army | கடந்த ஆண்டு மட்டும்.. இந்திய ராணுவ தலைமை தளபதி கொடுத்த ரிப்போர்ட்..
கடந்த ஆண்டு மட்டும் எல்லையில் 139 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றதாகவும், அதில் 124 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் ஆபரேஷன் சிந்தூரின் போது நடந்தவை என்றும் இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி தெரிவித்துள்ளார். மேலும் காஷ்மீரின் உள்ளூர் பகுதிகளில் தற்போது 140 பயங்கரவாதிகள் இருக்கக்கூடும் என்று ராணுவம் கணக்கிட்டுள்ளதாகவும், இதில் 10 பேர் உள்ளூர் பயங்கரவாதிகளாக இருக்க கூடும் என்றும், எஞ்சியவர்கள் அனைவரும் பாகிஸ்தானில் இருந்து வந்த பயங்கரவாதிகளாக இருக்க கூடும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.