Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (14.01.2026) | 11AM Headlines | ThanthiTV

Update: 2026-01-14 06:10 GMT
  • டெல்லியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்...... பல்வேறு துறைகளை சேர்ந்த பிரபலங்கள் பங்கேற்ற நிகழ்வில், பசுக்களுக்கு பிரதமர் மோடி உணவளித்து மகிழ்ந்தார்...
  • சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது... ராணுவ அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு அரசு ஊழியர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்... 
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 880 ரூபாய் அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.... ஒரு கிராம் தங்கம் 13 ஆயிரத்து 280 ரூபாய்க்கும், ஒரு சவரன் தஙக்ம் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது....
  • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் நான்காயிரத்து 390 பேருந்துகள் மூலமாக 2 லட்சத்து 940 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்... . கடந்த 5 நாட்களில் 6 லட்சத்து 90 ஆயிரத்து 720 பேர் அரசு பேருந்துகளில் பயணித்துள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது... 
  • பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஈரோட்டில் வாழைத்தார் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.... 200 ரூபாய்க்கு விற்பனையான பூவன் ரக வாழைத்தார் ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.... 
  • சபரிமலை பொன்னம்பலமேட்டில், ஜோதி வடிவாய் பக்தர்களுக்கு ஐயப்பன் காட்சியளிக்கும் மகர ஜோதி தரிசனம், தந்தி டிவியில் மாலை 5 மணி முதல் நேரலையில் ஒளிபரப்பாகிறது...
Tags:    

மேலும் செய்திகள்