10 வயது சிறுவனுக்கு மூளையை உண்ணும் அமீபா தொற்று - அதிர்ச்சியில் கேரளா
கேரளா மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவனுக்கு மூளையை உண்ணும் அமீபா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறுவன் தற்போது கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரளாவில் இந்த நோய் பாதிப்புக்கு 23 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், 11 பேர் உயிரிழந்ததாகவும் அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.