புதிதாக சில விசயங்களை கற்றுக் கொள்ள மாஸ்க் படத்தின் ஸ்கிரிப்ட் உதவியதாக இயக்குநர் வெற்றி மாறன் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற மாஸ்க் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியிட்டு விழாவில் கலந்து கொண்ட அவர், தன்னுடைய இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 24ஆம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். மாஸ்க் படத்தில் கவினுடன் ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில்,ருஹானி ஷர்மா கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.