ரசிகைக்கு லிப் கிஸ்.. சிக்கிய `சஹானா சாரல் தூவுதோ' பாடகர்

Update: 2025-02-02 09:06 GMT

சோனியா சோனியா, அச்சச்சோ புன்னகை, பம்பர கண்ணாலே, சஹானா, வாமா துரையம்மா உள்ளிட்ட பல பாடல்களைப் பாடி தன் தனித்துவமான தமிழ் உச்சரிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த பிரபல பாடகர் உதித் உதித் நாராயண் உதட்டு முத்தத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பாடிக் கொண்டிருக்கும்போது, ரசிகை ஒருவர் உதித் நாராயணுடன் செல்ஃபி எடுக்க வந்து அவரது கன்னத்தில் முத்தமிட்டார். உதித்தும் பதிலுக்கு திரும்பி ரசிகைக்கு முத்தமிட முயல, கன்னத்திற்கு பதிலாக உதட்டில் தவறுதலாக முத்தமிட்டு விட்டார். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் சலசலப்பை ஏற்படுத்தின.

இதுகுறித்து பாடகர் உதித் நாராயண் விளக்கம் அளித்துள்ளார். அதில் “இது ஏதோ உள்நோக்கத்தோடு நடந்தாக சிலர் விமர்சித்து... தான் மோசமானவன் என இணையத்தில் திட்டுகிறார்கள் என்றும், தங்கள் குடும்பத்தில் சர்ச்சையை ஏற்படுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள்“ எனவும் விமர்சித்துள்ளார். மேலும், தான் மேடையில் பாடும் போது, ரசிகர்கள் தன்னை விரும்புவதாகவும், அவர்களை மகிழ்ச்சியாக வைக்க வேண்டும் என்று தான் நினைப்பதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்