படுஜோராக தொடங்கிய ‘Thug Life’ டிக்கெட் புக்கிங் -விறுவிறுவென நடக்கும் ப்ரோமோஷன் பணிகள்

Update: 2025-06-02 12:00 GMT

தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் தக் லைப் திரைப்படத்தோட டிக்கெட் முன்பதிவு படுஜோரா தொடங்கியிருக்கு....படம் எப்போ வெளியாகுது....படத்தோட ப்ரோமோஷன் பணிகள் எப்படி போயிட்டு இருக்கு...மொத்தப் பாடல்கள்னு எவ்வளோனு பாக்கலாம்...

37 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன்- மணிரத்னத்தோட அசத்தலான கூட்டணில உருவாகியிருக்குற படம் தான் தக் லைஃப்... திரிஷா, அபிராமி, நாசர் உள்ளிட்டோருடன் சிம்புவும் முக்கிய கதாபாத்திரத்துல நடிச்சிருக்குற இந்த படத்த ராஜ்கமல் பிலிம்ஸ், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிச்சிருக்காங்க...

ஆக்‌ஷன் காட்சிகள் நிறைஞ்ச படமான 'தக் லைஃப்'க்கு, இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைச்சிருக்காரு....

அலி ஃபாசல், பங்கஜ் திரிபாதி, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, ஜிஷு சென்குப்தா, சன்யா மல்ஹோத்ரா, ரோஹித் ஷெரஃப், வையாபுரி உள்ளிட்ட பலர் இந்த படத்துல நடிச்சிருக்காங்க...

தக் லைஃப் படத்தில் மொத்தம் 9 பாடல்கள் இடம்பெற்றிருக்கு. இதுல 'விண்வெளி நாயகா..' என்ற பாடலை கமலின் மகளும், நடிகையுமான ஸ்ருதி ஹாசன் பாடி ரசிகர்கள் மனச கொள்ளையடிச்சிட்டாங்க.....

அதே மாதிரி படத்துல இடம்பெற்றிருக்க முத்த மழை என்ற பாடல பாடகி தீ பாடியிருந்த நிலைல, படத்தோட இசை வெளியீட்டு விழால பாடகி சின்மயி இந்த பாடல பாடி ரசிகர்கள மயக்கிட்டாங்க....பலரும் அவங்களுக்கு பாராட்டு தெரிவிச்சிட்டு வர நிலைல ரசிகர்கள் சின்மயி வெர்ஷன்ல இந்த பாடல வெளியிடனும்னு கேட்டு சமூக வலைதளங்கள்ல ட்ரென்ட்டாக்கிட்டு இருக்காங்க....

தக் லைப் படம் ஜூன் 5ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும்னு படக்குழு அறிவிச்சிருக்குற நிலைல டிக்கெட் முன்பதிவு தொடங்கியிருக்கு....இதுக்கு நடுவுல படக்குழு புரோமோஷன் பணிகள்ல ரொம்ப பிஸியா ஈடுபட்டிட்டு வராங்க..

நட்சத்திர பட்டாளம் இணைஞ்சிருக்குற படம் என்பதால ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துருக்கு...இதனால டிக்கெட் முன்பதிவும் படுஜோராக நடக்கும்னு எதிர்பார்க்கப்படுகிறது.....அதே மாதிரி தமிழ் சினிமாவுக்கு எட்டாக்கனியா இருக்குற ஆயிரம் கோடி வசூல தக் லைஃப் எட்டிப்பிடிக்குமானு பொறுத்திருந்து தான் பார்க்கனும்..

Tags:    

மேலும் செய்திகள்