இயக்குநர் கார்த்தி கட்டனேனி இயக்கத்தில் நடிகர்கள் தேஜா சஜ்ஜா, மனோஜ் மஞ்சு, ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள மிராய் திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகிறது. இதன் ட்ரெயிலரை பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படத்தை வெகுவாக பாராட்டியுள்ளார். அதற்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள நடிகர் மஞ்சு மனோஜ், திரைப்படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து அதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அதே தேதியில் வெளியாகவிருக்கும் சிவ கார்த்திக்கேயனின் மதராஸி படத்திற்கும் அவர் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.