`ஜனநாயகன்' படத்தில்' பகவந்த் கேசரி பட காட்சி?

Update: 2025-05-20 03:22 GMT

வினோத் இயக்கத்துல விஜய், பூஜா ஹெக்டே, பிரியாமணினு பெரும் நட்சத்திர பட்டாளமே நடிச்சிட்டு வர படம் ஜனநாயகன்...அடுத்த வருஷம் பொங்கலுக்கு படம் ரிலீசாக இருக்க, இது தெலுங்குல பாலகிருஷ்ணா நடிச்ச பகவந்த் கேசரி படத்தோட ரீமேக்னும், அதுக்காக படக்குழுகிட்ட ஒப்பந்தம் செஞ்சதாவும் வதந்தி பரவுச்சி...

ஆனா, ஜனநாயகன் டீம்ல இருந்து எந்த விளக்கமும் கொடுக்கல.இப்ப, 2 படத்தையும் தொடர்புப்படுத்தி ஒரு தகவல் கோலிவுட்ல வேகமா பரவிட்டு இருக்கு. குறிப்பா பாலய்யா நடிச்ச good touch, bad touch சம்பந்தமான ஒரு காட்சி ஜனநாயகன் படத்துல பயன்படுத்த போறதாவும், அதுக்காகதான் ஒப்பந்தம் போட்ருக்கதாவும் சினிமா வட்டாரத்துல சொல்லிக்குறாங்க..

இதுக்கும் ஜனநாயகன் டீம்ல இருந்து எந்த உறுதியான தகவலும் சொல்லல... இருந்தாலும், சம்பந்தப்பட்ட காட்சி சோசியல் மீடியாவுல வேகமா பரவிட்டு இருக்கு..

Tags:    

மேலும் செய்திகள்