கடும் சர்ச்சையை கிளப்பி விட்ட `லோகா’ பட வசனம் - படத்திலிருந்தே நீக்கப்படும் அந்த காட்சி

Update: 2025-09-03 03:35 GMT

கடும் சர்ச்சையை கிளப்பி விட்ட `லோகா’ பட வசனம் - படத்திலிருந்தே நீக்கப்படும் அந்த காட்சி

சர்ச்சை வசனத்திற்காக லோகா படக்குழு கர்நாடக மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது.

துல்கர் சல்மான் தயாரிப்பில் கல்யாணி நடித்துள்ள லோகா திரைப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தில், பெங்களூரு பெண்கள் ஒழுக்கம் இல்லாதவர்கள் போன்று வசனம் இடம்பெற்றது சர்ச்சையானதோடு, கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

இதற்கு வருத்தம் தெரிவித்துள்ள படக்குழு, சம்பந்தப்பட்ட உரையாடல் உடனடியாக நீக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளது.

யாரையும் அவமானப்படுத்தும் விதமாக காட்சிகளை வைக்கவில்லை எனவும், கர்நாடக மக்களின் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் படக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்