‘சுகர் பேபி என் சுகர் பேபி’ - வெளியானது ‘தக் லைஃப்’ படத்தின் செகண்ட் சிங்கிள்

Update: 2025-05-22 02:28 GMT

மணிரத்னம் - கமல்ஹாசன் - சிம்பு கூட்டணில உருவாகிருக்க தக் லைஃப் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு...

ஏ.ஆர்.ரகுமான் இசைல தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகள்ல இந்தப்படம் வர்ற ஜூன் 5ம் தேதி ரிலீசாகப்போகுது...

17ம் தேதி படத்தோட ட்ரைலர் சிலீசாகி ரசிகர்கள் மத்தில நல்ல வரவேற்பு கிடைச்சுது...

ஏற்கனவே வெளியான ஜிங்குச்சா பாடல் செம்ம வைரல்...

இந்த நிலைல படத்தோட 2வது பாடலான சுகர் பேபி ரிலீசாகி ட்ரெண்டிங்ல இருக்கு...

அப்டியே இந்தப்பக்கம் வந்தா தக் லைஃப் படத்தோட ப்ரமோஷன் நிகழ்வு மும்பைல நடந்துச்சு...

அப்ப...ரசிகர் ஒருத்தரு Trisha Mumbai loves you அப்டினு கத்தி சொல்ல...த்ரிஷா பதிலுக்கு I love மும்பை டூ-னு உற்சாகமா சொல்லிருக்காங்க..அந்த வீடியோ இணையத்த கலக்கிட்டு இருக்கு...

Tags:    

மேலும் செய்திகள்