Sakthi Thirumagan | Vijay Antony | ``என் கதையை சக்தித் திருமகன் என படம் எடுத்துள்ளார்கள்''
"என் கதையை சக்தித் திருமகன் என படம் எடுத்துள்ளார்கள்"
தலைவன் என்ற தனது கதையை சக்தித் திருமகன் என்ற பெயரில் படம் எடுத்துள்ளனர் என்று சுபாஷ் சந்தர் என்பவர் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,கடந்த 2022-ஆம் ஆண்டு ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு தனது கதையை மின்னஞ்சலில் அனுப்பி வைத்திருந்ததாக தெரிவித்தார். இந்த கதை தொடர்பாக ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பு நிறுவனத்திடம் பேசிய ஆடியோ ஆதாரங்களை திரட்டி வருவதாகவும், விரைவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.